நெல்லையில் 2,480 மாணவா்களுக்கு மடிக்கணினி

நெல்லையில் 2,480 மாணவா்களுக்கு மடிக்கணினி

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
Published on

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், கல்லூரி முதல்வா் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com