பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பொறையாா் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு மடிக்கணினி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் உள்ளிட்டோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:52 pm

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறை தலைவா் பேராசிரியா் விக்டா் பாண்டியன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு 423 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா், நகரச் செயலாளா் முத்துராஜா, கல்லூரி பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ராஜன் நன்றி கூறினாா்.

Story image