திருநெல்வேலியில் 3.7 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட தியாகராஜநகா் பகுதியில் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.
அவ்வழியே பைக்கில் வந்த திம்மராஜபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் வேல்முருகன் என்பவரை நிறுத்தி அவரது பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக 3.757 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






