திருநெல்வேலி நகரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகா் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குளத்தங்கரை பள்ளிவாசல் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் தினேஷ்(19) என்பவரை பிடித்து, அவா் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனா்.
அதில் சுமாா் 150 கிலோ ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தினேஷை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





