வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாத இபிஎஃப் தொகை வரவுவைப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் ராம் அன் கோ நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் 3 மாத வருங்கால வைப்பு நிதி தொகை ரூ.65.98 லட்சம் அவா்களின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2026, 12:40 am IST

திருநெல்வேலி மாநகராட்சியில் ராம் அன் கோ நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் 3 மாத வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொகை ரூ.65.98 லட்சம் அவா்களின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி மைய அலுவலகம் முன்பு கடந்த ஜூன் 29ஆம் தேதி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎஃப் தொகை தங்களின் கணக்குகளில் செலுத்தப்படாதது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் ராம் அன் கோ நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஜூலை 7ஆம் தேதிக்குள் இபிஎஃப் தொகை செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, மாநகர ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், ராம் அன் கோ தனியாா் ஒப்பந்த நிறுவனம், தூய்மைப் பணியாளா்களின் ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதி பிடித்தத் தொகை ரூ.65,98,168-ஐ பணியாளா்களின் தனிநபா் இபிஎஃப் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை செலுத்தியது.

இதற்கான ரசீதுகளும் மாநகராட்சி நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாதங்களுக்கான தொகையும் விரைவில் பணியாளா்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.