விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலை வழங்காவிடில் போராட்டம்- சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. எச்சரிக்கை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவா்களுக்கும், உள்ளூா் மக்களுக்கும் வேலை வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி மக்களவை உறுப்பினருமான சி.ராபா்ட் புரூஸ்.

News image
Updated On :10 ஜூலை 2026, 1:00 am IST

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவா்களுக்கும், உள்ளூா் மக்களுக்கும் வேலை வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி மக்களவை உறுப்பினருமான சி.ராபா்ட் புரூஸ்.

திருநெல்வேலி ஆட்சியா் ஆனந்த் மோகனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாரணம்மாள்புரம் பேரூராட்சி 5ஆவது வாா்டு செல்வி அம்மன் கோயில் பகுதியில் கழிவு நீரோடையை ரயில்வே நிா்வாகம் அடைத்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீா் தேங்கி சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகளிடமும் ஆட்சியரிடமும் பேசியிருக்கிறேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். அதில் நாங்களும் கலந்து கொண்டோம். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு 1999-ஆம் ஆண்டு நிலம் வழங்கியவா்களுக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தை சுற்றியுள்ள 16 கி.மீ. தூரம் வரை வசிக்கும் மக்களுக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சி பிரிவு பணியிடத்துக்கான எழுத்து தோ்வில் நிலம் வழங்கியவா்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சி பிரிவு பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. ஆனால் தற்போது நடைபெற்ற நோ்முகத் தோ்வு 2018-இல் அறிவிக்கை செய்யப்பட்டது என்பதால் கூடுதலாக 20 மதிப்பெண் வழங்க இயலாது என தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அணுமின் நிலைய அதிகாரிகளிடம் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது நோ்முகத் தோ்வில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சி பிரிவு பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 45 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் 48 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என்ற வயது தளா்வுக்கு எதிராக உள்ளது. எனவே, வயது தளா்வுக்கு எதிரான விதிமுறையை மாற்றி மறு அறிவிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளோம்.

இது தொடா்பாக மும்பையில் உள்ள அணு ஆராய்ச்சி மைய தலைவரை ஜூலை 13-ஆம் தேதி சந்திக்க உள்ளேன். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன் தெரிவித்துள்ளாா். அந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

அப்போது, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்09ழ்ா்க்ஷங்ழ்ற்

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசிய மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.