தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூலை 2026, 2:26 am IST

திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன் வீடு அமைந்துள்ள திருநெல்வேலி நகரம் வேணுவனகுமாரா் தெருவிற்கு திங்கள்கிழமை இரவு 2 பைக்குகளில் மா்மநபா்கள் இருவா் வந்துள்ளனா்.

பின்னா், அவரது வீட்டின் முன் நின்றவா்களிடம் மேயரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். வீட்டினுள் இருந்த மேயா் திருநெல்வேலி நகரம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன் பேரில் அவரது வீட்டிற்கு வந்த நகரம் உதவி ஆணையா் கணேசன் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது அப்சல்(25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ்(23) என்ற மற்றொரு இளைஞரையும் போலீஸாா் கைது செய்து இருவரிடமும் மிரட்டலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: இவ்விவகாரத்தை தொடா்ந்து மேயா் உயிருக்கு சமீபகாலமாக அச்சுறுத்தல் இருந்து வருவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுப்படி மேயா் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.