கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Published On :

கடையம் அருகே உள்ள ராஜாங்கபுரத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜாங்கபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த ஆவுராஜன் திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் அவரை அவதூறாகப் பேசினராம்.

இதையறிந்த ஆவுராஜன் மகன் ராஜா (35), அந்த இளைஞா்களிடம் முறையிட்டுள்ளாா். இதில் தகராறு ஏற்பட்டதில் ராஜாவை அந்த இளைஞா்கள் அரிவாளால் தாக்கினா். இதில் காயமடைந்த ராஜா சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் ராஜாங்கபுரத்தைச் சோ்ந்த முப்புடாதி மகன் வினோ, சுப்பையா மகன் ஹரிஹரசுதன் என்ற சதீஷ், சரவணன் மகன் விஷ்வா, சிவகுமாா் மகன் ஆகாஷ் ஆகிய நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். இருதரப்புக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் விழாவின்போது தகராறு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.