தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நெல்லை மேயருக்கு பாதுகாப்பு: மாமன்ற உறுப்பினா்கள் மனு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த மாமன்ற உறுப்பினா்கள்.

Published On :

திருநெல்வேலி மேயருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம், மாமன்ற உறுப்பினா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனின் வீட்டிற்குள் திங்கள்கிழமை புகுந்த மா்மநபா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் மேயா் மற்றும் அவரது குடும்பத்தினா் மிகுந்த அச்சத்திலும், மனவேதனையிலும் உள்ளனா். மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் பணியை நேரடியாக செய்து வரும் மேயருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே, மேயருக்கு தனிப்பட்ட காவலா் மூலம் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.