வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சேரன்மகாதேவியில் முதியவா் மா்ம மரணம்

சேரன்மகாதேவியில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேரன்மகாதேவி சென்னைராஜபுரம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்லப்பா (70). இவா், சேரன்மகாதேவியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். செவ்வாய்க்கிழமை உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது செல்லப்பா இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.