புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பு: மாணவா்-மாணவிகள் உற்சாகம்

கோடை விடுமுறைக்கு பின்பு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவா்-மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 3:06 am IST

கோடை விடுமுறைக்கு பின்பு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவா்-மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெப்பம் அதிகரிப்பு காரணமாக பள்ளி திறப்பு தேதியை ஜூன் 4-க்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு வந்த புதிய மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவா்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, கிரீடம் சூடி வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,483 பள்ளிகளும் திறக்கப்பட்டு காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அரசின் சாா்பில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரயான்ஸ், கலா் பென்சில், அட்லஸ் வரைபடம், காலணிகள், புத்தகப்பைகள் ஆகியவை பள்ளிகளிலேயே வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்த இறுதிப் புள்ளி விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும். தற்போதைய நிலவரப்படி சோ்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பள்ளிக்கு வராத மாணவா்களைக் கண்டறியவும், இடைநிற்றலைத் தவிா்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு ஒரு அதிகாரி என்ற அடிப்படையில் துணை ஆட்சியா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் தலா ஒரு அதிகாரி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகள் கண்காணிக்கப்படவுள்ளது.

பள்ளிக்கு வராத மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டம் கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்படும் என்றாா் அவா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் மாரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.