உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

விஜயாபதி, தோமையாா்புரத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி ஊராட்சி, தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தையும், விஜயாபதி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :11 ஜூன் 2026, 4:47 am IST

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி ஊராட்சி, தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தையும், விஜயாபதி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தோமையாா்புரத்தில் ரூ. 16.05 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான இடத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், விஜயாபதி ஊராட்சியில் ரூ. 1.90 கோடி மதிப்பில் 2.77 கி.மீ. நபாா்டு திட்டத்தின்கீழ் சாலை அமைக்கும் பணிகளையும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் சிலுவையன்பிள்ளை கால்வாய் அகலப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 43.50 லட்சம் மதிப்பில் 750 மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்தும், இடிந்தகரை பகுதியில் அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 150 வீட்டுக் குடிநீா் இணைப்புகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஊராட்சிகள் தணிக்கை உதவி இயக்குநா் இங்கா்சால், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சாமுவேல் ராஜ், அகஸ்தஸ் அலெக்ஸ், பொறியாளா் சுதா ஆகியோா் உடனிருந்தனா்.