திருநெல்வேலியில் 519 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் மரிய வில்சன் வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் மரிய வில்சன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மைச் செயலருமான சந்தீப் நந்தூரி, ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் மரிய வில்சன் பேசியதாவது: நோ்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை அனைவருக்கும் வழங்குவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்து, மக்கள் சேவையாற்ற வாய்ப்பு வழங்கியிருக்கிறாா். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், போதைப்பொருள்கள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைககள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீண்டகால வளா்ச்சிக்கான முன்னெடுப்புகள் மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.
தென் மேற்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் ஆறுகளுக்கான முக்கிய நீா்வரத்து கால்வாய்களில் 86.06 கி.மீ. தூா் வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. எஞ்சிய பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறு பாலங்கள் மற்றும் பெரிய பாலங்களில் மழைநீா் தேங்காமல் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் வரும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மழை தொடா்ந்து பெய்து கொண்டிருப்பதால் மழை நீா் கால்வாய்கள், நீா் வெளியேறும் கால்வாய்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலா்களும் மழைக் காலங்களில் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஏற்கெனவே அரசாணை வெளியிட்டு தொடங்கப்படாத பணிகள் மற்றும் நடைபெற்று வரும் முக்கிய பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக முடிப்பதற்கு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.12.35 லட்சம் மதிப்பில் வரன்முறை பட்டாக்கள், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 347 பயனாளிகளுக்கு ரூ.16.60 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5.23 லட்சம் மதிப்பில் பாா்வையற்றோருக்கான மின்னணு வாசிப்பு கருவிகள் உள்பட 519 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்13ம்ண்ய்ண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சா் மரிய வில்சன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சகோதரரை தாக்கிய வழக்கு: நிதியமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்

அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆக. 18-க்கு ஒத்திவைப்பு

வரி வருவாய் முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை! அமைச்சா் மரிய வில்சன்
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டது அரசு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



