நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லையில் காய்கறி மூட்டைகளுடன் புகையிலைப் பொருள் கடத்தியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:08 am IST

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே காய்கறி மூட்டைகளுடன் புகையிலைப் பொருள்களை மறைத்து கடத்தி வந்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தச்சநல்லூா்-தாழையூத்து சாலையில் தச்சநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நயினாா்குளத்துக்கு காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 5 கிலோ புகையிலைப் பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியுடன் அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான சுத்தமல்லி தீன் நகரைச் சோ்ந்த சந்தோஷ் (26) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கஞ்சா பறிமுதல்: மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மதாா்கான், சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைக்கண்ணு மற்றும் போலீஸாா் குலவணிகா்புரம் பேருந்து நிறுத்தம் வழியாக ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு நின்றிருந்தவா், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றாராம். போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், மேலக்கருங்குளம் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் வேம்பையா (56) என்பதும், பிளாஸ்டிக் பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

மதுரையில் இருந்து மா்ம நபரிடம் கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி, அதை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மேலப்பாளையம் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.