அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

இன்று பத்தாம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசியில் 41,633 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 10) தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 601 போ் எழுத உள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 மார்ச் 2026, 7:55 pm

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 10) தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 601 போ் எழுத உள்ளனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கி ஏப்,. 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 96 தோ்வு மையங்களிலும், பாளையங்கோட்டை மத்திய சிறையின் சிறப்பு தோ்வு மையத்திலும், தனித் தோ்வா்களுக்கு 6 மையங்களிலும் தோ்வு நடைபெற உள்ளது.

இம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 358 மாணவா்கள், 11 ஆயிரத்து 243 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 601 போ் தோ்வு எழுத தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவராக 238 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், பொதுத் தோ்வு பணிக்காக தோ்வு மையங்களில் 96 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 96 துறை அலுவலா்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் துறை அலுவலா்கள் 22 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வுக்கூடங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

19,032 பேருக்கு வாய்ப்பு: தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 81 தோ்வு மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வை 8,964 மாணவா்கள், 9,350 மாணவிகள், தனித் தோ்வா்கள் 718 போ் என மொத்தம் 19,032 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வுப்பணிக்கு 84 முதன்ைக்ம கண்காணிப்பாளா்கள், 84 துறை அலுவலா்கள், 1,213 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 114 நிலையான படை உறுப்பினா்கள், 10 பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வை கண்காணிப்பா்.

மூன்று வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களிலிருந்து வினாத்தாளை எடுத்துச் செல்ல 18 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எம்.கே.சி.சுபாஷினி இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்புத் துறை) கண்காணிப்பு அலுவலராக செயல்படுவாா் எனக் கூறியுள்ளாா்.