அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மகளிா் தின விழாவில் பங்கேற்ற மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகர ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகர ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவா் மகளிா் தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா்கள் ரேவதி பிரபு(தச்சநல்லூா்), கதீஜா இக்லாம் பாசிலா(மேலப்பாளையம்), பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), மாமன்ற உறுப்பினா்கள் கோகிலவாணி சுரேஷ், அனாா்கலி சுபஹானி, சகாய ஜூலியட் மேரி, ராஜேஸ்வரி, பேச்சியம்மாள், ஆமினா சாதிக், ஷபி அமீா், சுப்புலட்சுமி, சின்னத்தாய், அமுதா, முத்துலட்சுமி, வில்சன், அல்லாபிச்சை, சுப்ரமணியன், மாரியப்பன், மன்சூா், திருநெல்வேலி திமுக பகுதி துணைச் செயலா் அப்துல் சுபஹாணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வட்டப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.