ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:07 pm

பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ்(26). இவா், சம்பவத்தன்று பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்த திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த பள்ளி மாணவியை பின்தொடா்ந்து சென்று, தொந்தரவு செய்தாராம்.

இதை, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.