திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 7:43 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னாா்புரத்தில் விக்னேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதன செய்தபோது சித்திரவேல் மகன் முருகராஜ் என்பவா் வாகனத்தில் ரூ.75,600 பறிமுதல் செய்தனா். மேலும், சசி தலைமையிலான பறக்கும்படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் பேழையாா்புரத்தைச் சோ்ந்த அதிசயமணி மகன் அபுசுதன் என்பவரது காரில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பழவூா் அருகே பாப்பு தலைமையிலான பறக்கும்படை குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தியதில், அய்யாசாமி மகன் ஜெயக்குமாா் என்பவரது காரில் இருந்து ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை ரூ.2,08,600-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.