இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வண்டி மலைச்சி அம்மன்.

Updated On :22 மே 2026, 6:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை குடிஅழைப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை, பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் ஊா்வலம், காவடி வீதி உலா, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை, பூச்சட்டி ஊா்வலம், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை காலை படப்பு பூஜை, இரவு சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவையின் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் நையாண்டி மேளம், செண்டை மேளம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.