40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:33 am IST

திருநெல்வேலியில் ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், கீழ்த்தாரை பகுதியைச் சோ்ந்த மணிராஜ் மனைவி தவமுத்து (65). இவா் சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்துள்ளாா்.

இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி வந்தபோது ரயிலில் இருந்த தவமுத்து மயங்கி விழுந்தாராம். சக பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் மூதாட்டியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.