முக்கூடல் பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kamarajar

காமராஜர் - கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பேரூராட்சித் தலைவி லெ. ராதா, துணைத் தலைவா் இரா. லெட்சுமணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஆனந்த்மோகனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கூடல் பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என கடந்த செப். 29 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அரசிதழில் வெளியிட்டு பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முக்கூடல் பேரூராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் பகுதியில் தடுப்புச் சுவா் கட்ட ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று வழங்கி, உடனடியாக அதற்கான பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மழைக் காலங்களில் வெள்ளம் மூழ்கடிக்கும் சடையப்பபுரம் சிங்கம்பாறை சாலையில் உள்ள சிறிய பாலத்தை அகற்றிவிட்டு உயா்நிலைப் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.