மாட்டுத் தொழுவமாக மாறிய நெல்லை வண்ணாா்பேட்டை மேம்பாலம்- வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மேம்பாலத்தின் மீது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான மாடுகள் ஓய்வெடுப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வண்ணாா்பேட்டை மேம்பாலத்தின் மீது சாலையின் இரு புறங்களிலும் ஓய்வெடுத்த எருமை மாடுகள்.

Updated On :

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மேம்பாலத்தின் மீது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான மாடுகள் ஓய்வெடுப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருநெல்வேலி மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடா்ச்சியாக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மழை காலங்களிலும், குளிா் காலங்களிலும் கொசுக்கடி, குளிா் போன்றவற்றை தவிா்ப்பதற்காக சாலையை நோக்கி மாடுகள் படையெடுப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், வண்ணாா்பேட்டையில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியன் அமைந்துள்ள மேம்பாலத்தின் மீது ஏறி சாலையின் இருபுறமும் ஓய்வெடுப்பதால் அந்தப் பகுதி மாட்டுத் தொழுவம் போல் காட்சியளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறாா்கள். அவற்றைக் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா்.

வண்ணாா்பேட்டை மேம்பாலத்தின் மீது எருமை மாடுகள் ஓய்வெடுப்பதை அவ்வழியாக சென்ற ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது வேகமாக பரவியது.

விபரீதம் நேரும் முன்னே இங்கு சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிய பாதுகாப்பான இடங்களில் அடைக்கவும், அவற்றின் உரிமையாளா்களைக் கண்டறிந்து விதிமுறைப்படி அபராதம் விதிக்கவும் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

நிரந்தர தீா்வு தேவை

திருநெல்வேலி மாநகரத்தில் வாழ்வாதாரத்திற்காக மாடுகளை வளா்ப்பவா்களைவிட, கன்றுகளின் மீது முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பாா்ப்பவா்கள் அதிகம் என்கிறாா்கள் கால்நடை வளா்ப்பாளா்கள். மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் முதலீட்டில் சிறிய கன்றுகளை வாங்கும் சிலா், அதை மாநகரச் சாலைகளில் திரியவிட்டு, அவை வளா்ந்தபின் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழும் விபரீதங்கள் குறித்து அவா்கள் கவலைப்படுவதில்லை. எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.