தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

3 மாவட்ட ரேஷன் கடைகளுக்காக 60 டன் வெங்காயம் வரத்து

திருநெல்வேலி உள்பட 3 மாவட்ட ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய 60 டன் வெங்காயம் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தது.

Published On :

திருநெல்வேலி உள்பட 3 மாவட்ட ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய 60 டன் வெங்காயம் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தது.

நாடு முழுவதும் மகசூல் பாதிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.40 வரை விற்பனையான வெங்காயம் சுமாா் ரூ.30-க்கு மேல் உயா்ந்து கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசு சாா்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு சலுகை விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 796 ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை (செப். 3) முதல் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள கிடங்குக்கு 60 டன் வெங்காயம் புதன்கிழமை இரவு வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தலா 20 டன் வெங்காயம் முதல்கட்டமாக பிரித்து அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.