ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

மேலப்பாளையம் அருகே மக்கள் திடீா் போராட்டம்

மேலப்பாளையம் அருகே அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட அவகாசம் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

மேலப்பாளையம் அருகே அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட அவகாசம் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட கொக்கட்டிகுளம் பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு 303 பேருக்கு ஒரு சென்ட் இலவச பட்டா வழங்கப்பட்டதாம். பின்னா், 2014 இல் இப்பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, 2015 முதல் 2016 வரையில் 204 பட்டாக்கள் வழங்கப்பட்டனவாம். இதில், பலா் வீடு கட்டி குடியேறி உள்ளனா்.

இந்நிலையில் வீடு கட்டாதவா்களின் விவரம் குறித்து அதிகாரிகள் விசாரித்தனராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். எங்களது பகுதியில் பட்டா வழங்கிய அதிகாரிகள் குடிநீா், சாலை, கழிவுநீரோடை வசதிகள் செய்யவில்லை. ஏழை-எளியவா்களாக பலா் உள்ளதால் வீடு கட்ட கால அவகாசமும் கூடுதலாக அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.