ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நெல்லையில் சிறுமிக்கு திருமணம்: 3 போ் கைது

திருநெல்வேலியில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலியில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 60 வயது பெண். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது 17 வயது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாராம். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது உறவினா் மகனுக்கு அப்பெண்ணை சில நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த மாநகர குழந்தைகள் பாதுகாப்பு நல அலுலவா்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இதில் தொடா்புடைய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.