குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாடுநலம் பெற வேண்டி 5,004 மாவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் சித்திரை வசந்த விழாவையொட்டி வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, நிறைஅவி அளித்தல், இளைஞர் வேள்வி, ஒன்பது கோள் வழிபாடு, செல்வ வழிபாடு, குபேரலட்சுமி வேள்வி ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து 1,008 கலச பூஜை, இறைவன் வேள்வி, இறைவி வேள்வி, வேதம், திருமுறைகள் ஓதுதல், மாலையில் 1,008 சுமங்கலி பூஜை, இரவு அம்மன் பவனி வருதலும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலையில் 1,008 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனையும், மாலையில் நாடு நலம் பெற வேண்டி 5004 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில், சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இரவில் சுவாமி- அம்பாளுக்கு மலர் பூஜையும் அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, மாதாந்திர மாவிளக்கு பூஜை குழுவினர் மற்றும் சக்திஸ்ரீ அம்பிகை ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


