/

உலக செவிலியர் தின விழா

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On :13 மே 2013, 2:04 am IST

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

 பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினம், உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கோவில்பட்டி பரிமளா நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை கோவில்பட்டி பசுமை இயக்க செயலர் ஜெகஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை சென்றடைந்தது.

 பின்னர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கைகளில் மெழுகுவர்த்தி தீபம் பிடித்தவாறு அன்பு, பரிவு, தியாகம், சேவை, அர்ப்பணிப்பு உணவுடன் செயல்பட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 சிறந்த செவிலியர்களுக்கான விருதை விஜயலட்சுமி, யசோதை,முருகலட்சுமி, சுப்பாலட்சுமி ஆகியோருக்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ருக்மணி வழங்கினார். நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் தலைமை வகித்தார். பரிமளா நர்சிங் கல்லூரி நிர்வாக அலுவலர் அய்யலுசாமி முன்னிலை வகித்தார்.

 விழாவில், இலக்கிய உலா ரவீந்தர், வழக்குரைஞர் முத்துராமலிங்கம், கோவில்பட்டி அரசு கிளை நூலகர் பூல்பாண்டி, பரிமளா நர்சிங் கல்லூரி துணை முதல்வர் ராமதிலகம், பாரதியார் நினைவு அறக்கட்டளை இயக்குநர் நடராஜன் உள்பட பரிமளா நர்சிங் கல்லூரி மாணவிகள், மாவட்ட மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.