பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தூத்துக்குடியில் அஞ்சலக ஏடிஎம் மையம் திறப்பு

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.ராஜ் தலைமை வகித்தார். புதிய ஏடிஎம் மையத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அஞ்சல் துறை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதுநிலை கண்காணிப்பாளர் ராஜ் கூறுகையில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் 6 மாத காலத்திற்குள் அஞ்சல் துறையின் ஏடிஎம் சேவை, வங்கிகளுடன் இணைக்கப்படும் என்றார் அவர்.

கோவில்பட்டியில் இன்று திறப்பு:

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஏ.டி.எம். மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 4) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்துப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார், தென் மண்டல அஞ்சல் துறை அதிகாரி சாருகேசி, கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ரெங்கசாமி வரவேற்கிறார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் கண்ணபிரான் நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.