ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி உடன்குடியில் கடையடைப்பு

உடன்குடி நகரப் பகுதிகளில் வியாபாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:04 am

DIN

உடன்குடி நகரப் பகுதிகளில் வியாபாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
உடன்குடி நகரின் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக பழுதடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. தற்போது மழைக்காலமாக உள்ளதால் சாலை முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.இந்த மழைநீர் சில சமயங்களில் கடைகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது.
மேலும், வாகனங்கள் சாலையில் செல்லும்போது மழைநீர் தெறித்து வியாபாரப் பொருட்களையும், பொதுமக்களையும் நனைத்து விடுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.  இதையடுத்து, சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, உடன்குடியில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உடன்குடி வருவாய் ஆய்வாளர் (பொ) அம்பிகாவிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆ. ரவி, பாஜக மாவட்டச் செயலர் சிவமுருகன் ஆதித்தன், திமுக நகரச் செயலர் ஜான்பாஸ்கர், ரவிராஜா, ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் மற்றும் வியாபாரிகள் சாலைகளை தாற்காலிகமாக சீரமைக்காமல், நிரந்தரமாக சீரமைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து, உடன்குடி கடைவீதியில் தேங்கியிருந்த மழைநீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு சரல்கற்கள் கொட்டப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டது. சாலைகள் நிரந்தரமாக நன்கு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வியாபாரிகளிடம் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.