வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பன்னம்பாறை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பன்னம்பாறை  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:00 am

DIN

பன்னம்பாறை  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட  அனைவருக்கும் கல்வி  இயக்கம்,  ராஷ்டிரிய  அவிங்கார், குறுவள மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சாத்தான்குளம் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் அர்ஜூன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். அரசு  உயர்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர் மோசஸ் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தோணி மிக்கேல்ராஜ் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மலையழகு குத்துவிளக்கேற்றினார். கண்காட்சியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
உயர்நிலைப் பள்ளி அளவில் நெடுங்குளம் ஆர். சி. நடுநிலைப் பள்ளி முதல் பரிசும்,  சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி 2ஆவது பரிசும்,  பன்னம்பாறை அரசு  உயர்நிலைப் பள்ளி 3ஆவது பரிசும் பெற்றது.
தொடக்கப் பள்ளி அளவில் வடக்கு அமுதுண்ணாக்குடி டிஎன்டிடி ஏ பள்ளி முதலிலிடமும்,  கொம்பன்குளம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 2ஆவது பரிசும்,  சாத்தான்குளம் மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளி 3ஆவது பரிசும்,  பன்னம்பாறை  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிறப்பு பரிசும் கிடைத்தன. ஆசிரியை கிறிஸ்டி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர் ஜேஸ்பின் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.