குடிநீரேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுது: குடிநீர் விநியோகம் பாதிப்பு

சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 3 மாதங்களாக மோட்டார் பழுதை சீரமைக்காததால்  பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 3 மாதங்களாக மோட்டார் பழுதை சீரமைக்காததால்  பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பேருந்து  நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரிய குடிநீரேற்றும் நிலையம்  உள்ளது.  இங்கு பொன்னங்குறிச்சியில் இருந்து  வரும்  குடிநீரை ஏற்றிட  இரு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம்  நிலையத்தில் தண்ணீர்  ஏற்றப்பட்டு அங்கிருந்து சாத்தான்குளம் பேரூராட்சி 15 வார்டு பகுதிக்கும்  3 பிரிவாக பிரித்து 3 நாள்களுக்கு  ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் கடந்த 3மாதங்களுக்கு  முன்னர்  மின் மோட்டர் திடீரென பழுதடைந்தது.   இதனால் மீதமுள்ள மோட்டார் மூலம் நீர்  ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.   இதனால் முறையாக  தண்ணீர்  ஏற்றமுடியாமல் குறைந்த  அளவே தண்ணீர்  ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது.  இதனால் 3 நாளுக்குள் வர வேண்டிய தண்ணீர் 5 நாள்களுக்கு  ஒரு  முறை விநியோகிக்கப்படுகிறது.  மேலும் வீடுகளுக்கு 3 மணி நேரம்  வழங்கப்படும் தண்ணீர் தற்போது  இரண்டு மணி நேரம் மட்டுமே  வழங்கப்பட்டு வருகிறது.   இதனால்  போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமம்  அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து குடிநீர் வடிவாரிய அதிகாரிகளிடம்  கேட்டதற்கு,  பழுதான மோட்டார் சீரமைத்து  வந்ததுடன் சீராக குடிநீர் வழங்கப்படும்  என தெரிவிக்கின்றனர்.  ஆதலால் பழுதான மின்மோட்டாரை  உடனடியாக சீரமைக்க வேண்டும்  என பொதுமக்கள் வலிலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com