தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நவம்பர் 16 மின்தடை
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்துக்குள்பட்ட வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கல்லன் பரம்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஓட்டப்பிடாரத்தில் நவ.18இல் மின்தடை: இதேபோல், ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நவ. 18ஆம் தேதி நடைபெறுவதால், அன்றையதினம் ஓட்டப்பிடாரம், ஒசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...