/

கச்சனாவிளை பள்ளியில்  அறிவியல் கண்காட்சி

நாசரேத்  அருகேயுள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள்  உயர்நிலைப் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:41 pm

DIN

நாசரேத்  அருகேயுள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள்  உயர்நிலைப் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  
கண்காட்சியை  தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவசாரா மேற்பார்வையாளர்  ஆனந்தகிருஷ்ணன்  தலைமை   வகித்து   திறந்துவைத்தார். பள்ளித் தாளாளர் நான்சிமேரி, தலைமை ஆசிரியை  விமலாமேரி , கிராம  செவிலிலியர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கண்காட்சியில் எளிய  உபகரணங்களை பயன்படுத்தி போக்குவரத்து தொலைத்தொடர்பு  சாதனங்களும்,  அவற்றின் பயன்களும்,  மூலிலிகை தாவரங்கள், அனல்மின் நிலைய  மாதிரி, தொடர் வண்டி சைகை,  இரு வேறுபட்ட கரைசல்களின்  அடர்த்தி,  பரப்பு இழுவிசை, பாராசூட்,  தண்ணீரை சுத்தப்படுத்தம் கருவி,   மனித மூளையின் மாதிரி உள்ளிட்ட பல்வேறு அறிவியல்  படைப்புகளும்,  அனைத்து  பாடவாரியாக   படைப்புகளும், மாதிரிகளும் இடம் பெற்றன.  
அறிவியல் கண்காட்சியை   கச்சனாவிளை அசோகாவித்யாலயம் தொடக்கப்பள்ளி, நெய்விளை  டி. என்.டி.டி. ஏ நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி  மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.


ஸ்பிக் நகர் பள்ளியில்...
தூத்துக்குடி, அக்.20:       தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியும், ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி ஸ்பிக் நகர் வளாகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
கண்காட்சியை ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியின் செயலர் வெங்கட்ராமன் தொடங்கிவைத்தார். அறிவியல், சமூக அறிவியல்,  கணிதம் சார்ந்த 128 படைப்புகளைப் பள்ளி மாணவர்கள் கண்காட்சியில் அமைத்து இருந்தனர். கண்காட்சியை காமாட்சி வித்யாலயம்,  சவேரியார்புரம் புனித அந்தோணியார் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் பார்வையிட்டனர்.
வஉசி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு கண்காட்சியில் முதல் மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை, ஸ்பிக் ஆலைப் பிரிவு தலைவர் பாலு, என்டிபிஎல் துணை பொதுமேலாளர் மாதேஷ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.