கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரே புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பு அரசு கால்நடை மருத்துவமனை எதிர்புறம் அம்பேத்கர் சிலை இருந்து வந்தது. வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கப் பணியையடுத்து அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து, அரசு மருத்துவமனை எதிர்புறம் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்து, சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாநிலப் பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், வழக்குரைஞரணியைச் சேர்ந்த மாணிக்கம், புதிய பாரத கட்சியின் மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், ஒன்றியச் செயலர் சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டிக் குழுத் தலைவர் தாவீதுராஜா தலைமையில், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

