தீ தொண்டு நாளையொட்டி, தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீ தொண்டு நாளாகவும், ஒரு வாரம் தீ தொண்டு வாரமாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் அணிவகுக்க, உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், நிலைய அலுவலர்கள் நட்டார் ஆனந்தி, கோமதி அமுதா, ராஜூ மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், கமான்டோ வீரர்கள்
கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









