முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தூத்துக்குடியில்  பெண் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் தனியாக நடந்து சென்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:04 am IST

தூத்துக்குடியில் தனியாக நடந்து சென்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்த ஜோதிமாணிக்கம் மனைவி செல்வபாப்பா (52). இவர், வயலுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அந்தப் பகுதியில் உள்ள விவசாய சங்க கட்டடம் அருகே அவர் தனியாக நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனராம். இதில், செல்வபாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட செல்வபாப்பாவின் மகன் இசக்கிமுத்து அதே பகுதியில் கடந்த ஆண்டு சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.