காயல்பட்டினத்தில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் சபை சார்பில் உலக நன்மைக்காக அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அமைப்பின் 91ஆவது ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உலக அமைதி வேண்டியும், நல்ல மழை வேண்டியும் அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஹாமிதிய்யா மதரஸா சபை பேராசிரியர் காஜாமுஹ்யத்தீன் தமிழில் மொழி பெயர்த்து ஓதினார். இந்த பிரார்த்தனையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் முகைதீன், கடையநல்லூர் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர். நேர்ச்சை விநியோகம் வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்






