அதிமுக நிலையான ஸ்திரத்தன்மை கொண்ட இயக்கம். எத்தனை இயக்கங்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திருச்செந்தூர் அருகே பாரத நல்வாழ்வுத் திட்ட மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திவாகரன் தனிக் கட்சி தொடங்கியிருப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக நிலையான ஸ்திரத்தன்மை கொண்ட இயக்கம். எத்தனை இயக்கங்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் இந்த ஆட்சி தொடரும். காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழத்தின் உரிமையை பெற நடவடிக்கை எடுப்போம்.
ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் நேரடியாக இணையதளம் வாயிலாக கட்டணம் பதிவு செய்யப்படும். இதன்மூலம் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.