/

அனுமதியற்ற மனைப் பிரிவு மனைகள் வரன்முறை: கோவில்பட்டியில் நாளை சிறப்பு முகாம்

அனுமதியற்ற மனைப் பிரிவு மனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 3)  நடைபெறுகிறது.  

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:59 am IST

அனுமதியற்ற மனைப் பிரிவு மனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 3)  நடைபெறுகிறது. 
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உள்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திட, திருநெல்வேலி மண்டல நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் மற்றும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.  பொதுமக்கள் தங்களுடைய மனைகளை வரன்முறைப்படுத்திட உரிய ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் விண்ணப்பத்துடன் சாலை அமைப்புடன் கூடிய மனைப் பிரிவு வரைபட நகல் (La‌y‌o‌u‌t c‌o‌p‌y), சர்வே வரைபடம் (FM​B)), பதிவு செய்யப்பட்ட பத்திர நகல், பட்டா சிட்டா அடங்கல் நகல் மற்றும் வில்லங்கச்சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். 20.10.2016-க்கு முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது மனைகளை வரன்முறைப்படுத்தி வரன்முறை ஆணைகள் பெற்றுச் செல்லலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.