தூத்துக்குடி சார்ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.
தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து சார்ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை (ஆக. 7) பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி சார்ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீதமுள்ள மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் தனியார் வேலையில் இல்லாத மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெறாத தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் முகாமில் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ளலாம். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை, இறப்பு நிவாரணம், திருமண உதவித்தொகை கோரும் பயனாளிகளும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

