காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13ஆவது மாணவியர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். 3ஆம் ஆண்டு கணிதவியல் மாணவி எஸ். ரிஷாதா கிராத் ஓதினார். சிறப்பு விருந்தினராக, தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றம் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கொடி கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் ஆர்.சி. வாசுகி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
மாணவர் பேரவைத் தலைவர் 3ஆம் ஆண்டு இயற்பியல் மாணவி பி. கோல்டா ஏஞ்சலினா, துணைத் தலைவர் 2ஆம் ஆண்டு வணிகவியல் மாணவி ஏ.எஸ். செய்யது அஜீபா, செயலர் 3ஆம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி வி. அஜேகா, துணைச் செயலர் முதலாமாண்டு வணிகச் செயலாற்றியல் மாணவி ஐ.ஏ. ஃபாமிதா ஆகியோருக்குப் பதவிக்குரிய சீருடைகளை வழங்கி அடையாளச்சின்னம் அணிவித்து, பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து, 10 மன்றச் செயலர்கள், 15 குழுச்செயல்பாட்டின் செயலர்கள், துறைசார்ந்த வகுப்புத் தலைவியர் 33 பேர் ஆகியோருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
கல்லூரிச் செயலர் வாவு டபிள்யூ.எம்.எம். மொகுதஸிம் , துணைச் செயலர், வாவு எஸ்.ஏ.ஆர். அஹமது இஸ்ஹாக் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி நிறுவனர் தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் நினைவுப் பரிசு வழங்கினார்.
கல்லூரி இயக்குநர், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். வணிகவியல் துறைத் தலைவரும் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளருமான எல். ஆர். சுபா வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்தின் மர்ம கிணறு! 5 நாள்கள் தளும்பிக்கொண்டே இருந்ததன் பகீர் பின்னணி!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட டிரைலர்!

வார பலன்கள் (ஆக. 7 - 13) - மீனம்

வார பலன்கள் (ஆக. 7 - 13) - கும்பம்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


