
காவல் பணிக்கு இடையூறு செய்ததாக இளைஞர் கைது
கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாரை
கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரசுப்பு மகன் ஹரிகரசுதன்(26). இவர் மீது பல்வேறு வழக்குகள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அவரை போலீஸார் ஒரு வழக்கு தொடர்பாகவும் தேடி வந்தனராம்.
இந்நிலையில், ஹரிகரசுதன் பார்க் ரோடு வாட்டர் டேங்க் அருகே வியாழக்கிழமை நின்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து மேற்கு காவல் உதவி ஆய்வாளர்கள் இசக்கிராஜா, அரிக்கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஹரிகரசுதன் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை தாக்க முயன்று மிரட்டினாராம். அதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





