சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: சாத்தான்குளம் மகளிர் பள்ளி முதலிடம்

நாசரேத்  மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:42 am IST

நாசரேத்  மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
நாசரேத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.  இதில்,  நாசரேத் , சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி வட்டார  பள்ளி  மாணவர், மாணவிகள் பங்கேற்று விளையாடி வந்தனர்.  இதில்,  92 புள்ளிகள் பெற்று சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டியில் இப்பள்ளி முதலிடம் பிடித்திருந்ததும், தற்போதுள்ள மண்டல அளவிலான கபடி போட்டியிலும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும்,  பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை அன்பரசியையும்,  பள்ளி தாளாளர் ரெமிஜியூஸ் அடிகளார்,  தலைமையாசிரியை  அமிர்த ராஜரீகம், உதவித் தலைமையாசிரியை ஐவன் அமலபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியைகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள்,  பழைய மாணவிகள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.