வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடியில் வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்குகளை சமரசமாக தீர்வு காண்பது குறித்து சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு வழக்குரைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆ. சுரேஷ் விஸ்வநாத் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார். முகாமின்போது, சமரசம் மூலமாக எந்தெந்த வழக்குகளுக்கு தீர்வு காண இயலும் என்பது குறித்தும், சமரசம் மூலமாக பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் ஏற்படக்கூடிய பயன் குறித்தும், சமரசமாக தீர்வு காணப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தார். இதில், ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






