ஓய்வூதியர்கள் நலச் சங்கக் கூட்டம்

கோவில்பட்டியில், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர் நலச் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

கோவில்பட்டியில், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர் நலச் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். 
இதில் சங்கத் தலைவர் செல்லப்பா,   செயலர் ராமசுப்பு,  பொருளாளர் பொன்னு,  ஐ.என்.டி.யூ.சி. செயலர் ராமமூர்த்தி,  துணைத் தலைவர் மகேந்திரன்,  துணைச் செயலர் பிச்சையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை கீழ்தளத்தில் அமைக்க வேண்டும். 
இலக்குமி ஆலை மேம்பாலம் முன்பிருந்து ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் வரை உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச் சாலையை முறையாக அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் நடைமேடை அமைக்க வேண்டும். நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரியினங்களை திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com