தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 23) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 23) வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் தூத்துக்குடி பகுதி- 1, ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர், திருச்செந்தூர் வட்டம் மேலத்திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டம் தச்சமொழி, கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி பகுதி - 1, விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை, எட்டயபுரம் வட்டம் அயன்வடமலாபுரம், ஓட்டப்பிடாரம் வட்டம் சவரிமங்கலம், கயத்தாறு வட்டம் வெள்ளாளங்கோட்டை ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.