வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

சாலை விரிவாக்கம் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:55 am IST

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  பகத்சிங் மன்ற கோவில்பட்டி ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் ஆட்டோ தொழிற்சங்க வட்டச் செயலர் கொம்பையா தலைமை வகித்தார்.   விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் சுந்தரி, நரிக்குறவர் சங்க மாவட்டச் செயலர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்   கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை- மந்தித்தோப்பு சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,  சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
 இதில், டிப்பர் சங்க வட்டச் செயலர் காளிராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி, மன்ற உறுப்பினர்கள் கணேசன், சேதுராமசாமி, அழகர், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.