எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

Updated On :24 ஜூலை 2018, 12:57 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 7000 டன் கந்தக அமிலம், 600 டன் பாஸ்பரிக் அமிலம், 27,000 டன் ஜிப்சம், 10,000 டன் ராக் பாஸ்பேட், 60 டன் ஹைடிரோ புளோரிக் அமிலம் என 95 சதவீத ரசாயனப் பொருள்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆலைக்குள் இருந்த டீசல் தற்போது ஜெனரேட்டரை இயக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்சம் முழுமையாக அகற்ற கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. 
விளாத்திகுளம் பகுதி குளங்களில் வண்டல் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் விதிகளை மீறி ஆற்று மணலை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி ஆற்று மணல் அள்ளுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தற்போது 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைசி குளம் வரை நீர் வரும் என்பதால், வாழைப் பயிர்கள் பயனடையும். 
 தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒருவர் தடை ஆணை பெற்றுள்ளார். அந்த தடையை ரத்து செய்வது தொடர்பாக சட்ட ரீதியான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஆலந்தலை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் எல்மோ குவைத் நாட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடைய தாய் ஜெயந்தி, மனைவி நிஸாந்தினி ஆகியோருக்கு தலா ரூ. 97,941 வீதம் ரூ. 1,95,881- க்கான காசோலையையும், தமிழ்நாடு நோயாளர் நல நிதியிலிருந்து இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மோகன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
 நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.