விளாத்திகுளம் அருகே வி.வேடபட்டியில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக டிராக்டர், லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம், பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17 யூனிட் மணல் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம் அருகேயுள்ள வி.வேடபட்டி கிராமத்தில் உள்ள ஊருணியில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் லெனின் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வி. வேடபட்டி கண்மாய் பகுதியில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட ஊருணியின் ஆழமான பகுதியிலிருந்து ஆற்று மணல் அள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரி, டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றி வி. வேடபட்டி காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்! | Madurai

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!





