டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

செவிலியர் படிப்பு: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதல் நாளில் 240  விண்ணப்பங்கள் விநியோகம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்புக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

Updated On :24 ஜூலை 2018, 12:56 am IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்புக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
 செவிலியர் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ள நிலையில்,  விண்ணப்பங்கள் விநியோகத்தை கல்லூரி (பொறுப்பு )முதல்வர் ராமசுப்பிரமணியன்  தொடங்கிவைத்தார். துணை முதல்வர் லூசி நிர்மல் மடோனா, நிர்வாக கல்வி அலுவலர் குமரன்,
 இளநிலை நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் உடனிருந்தனர்.  பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்,  மாணவிகளும், அவர்களது பெற்றோரும் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.
   இதுகுறித்து  முதல்வர்(பொ) ராமசுப்பிரமணியன் கூறியது:  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு 600 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகள் 106 பேரும், பொது பிரிவைச் சேர்ந்த மாணவிகள் 134 பேரும் என விண்ணப்பங்களை பெற்றச் சென்றனர். விண்ணப்பங்களை பெற்றவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.